அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. குறுகிய காலத்தில் 1000 கோடி வசூலை கடந்த முதல் இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது. ‘புஷ்பா 2’ படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் யார் நடிக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது தயாரிப்பாளர் நாக வம்சி பேட்டியளித்துள்ளார். அதில், திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பதை உறுதி செய்துள்ளார். ராஜமௌலியின் பட பாணியில் இப்படம் பிரமாண்டமாக இருக்கும் என்றும் உலகில் யாரும் இதுபோன்ற காட்சிகளை உருவாக்கவில்லை என்றும் நாக வம்சி குறிப்பிட்டுள்ளார்.

பிரமாண்ட தயாரிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் மூலம் த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படம் அல்லு அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையை மாற்றி மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.