ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி வெர்ஷனில் படம் ரூ.618 கோடியை வசூலித்துள்ளது, இதன் மூலம் பாலிவுட்டில் இரண்டாவது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் படம் ரூ.60 கோடி வசூலை தாண்டியுள்ளது.
மேலும், ‘கிஸ்ஸிக்’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ‘புஷ்பா 2’ மூலம், அல்லு அர்ஜுனின் திரையுலக பயணத்தில் ரூ.1500 கோடி வசூல் என்பது புதிய மைல்கல் ஆகும். இந்த படத்தின் வசூல் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1800 கோடியை எட்டுமா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில், அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘புஷ்பா 2’, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம்.