‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அட்லியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில், சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது, மேலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவரை இன்னொரு நாயகனாக நடிக்க அட்லீ முயற்சி செய்தார். ஆனால், சம்பள பிரச்னையால் படம் நடக்கவில்லை.
தற்போது அதே கதையில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ திட்டமிட்டுள்ளார். இன்னொரு நாயகியாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் பெரும் சம்பளம் கேட்டதால் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் நபர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இந்தப் படத்தில் மூன்று பேர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இது அரச காலத்துக்கும் இன்றைய காலகட்டத்துக்கும் இடையே நடக்கும் கதை என்பதால் கிராபிக்ஸ் படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் பெரும் தொகையை செலவழிக்கப் போகிறது.