இயக்குனர் அட்லீ – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

படப்பிடிப்பு தேதிகள் இன்னும் முடிவாகாததால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 8-ம் தேதி அறிவிப்பில் பிரியங்கா சோப்ரா அறிவிக்கப்படுவார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.