ஐதராபாத்: ஐதராபாத்தில் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.1 கோடி அளிப்பதாக அல்லு அர்ஜூனின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் படக்குழு ரூ.50 லட்சம், இயக்குனர் ரூ.50 லட்சம் அளிக்க உள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 சினிமா பார்க்க சென்ற போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் மருத்துவ செலவுக்கு ரூ.1 கோடி அளிப்பதாக நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
மேலும் அக்குடும்பத்தினருக்கு படக்குழு ரூ.50 லட்சமும் படத்தின் டைரக்டர் ரூ.50 லட்சமும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.