
ஐதராபாத்: டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ.294 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் ரூ.449 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ரூ.500 கோடியை தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட 3 நாட்களில் ரூ.500 கோடியை எட்டியுள்ளது.
இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக ரூ.500 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை ‘புஷ்பா 2’ பெற்றுள்ளது. இந்தி பதிப்பில் மட்டும் ரூ.205 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா 1’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வியாழக்கிழமை வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.