ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ சல்மான் கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் பட்ஜெட் காரணமாக படம் கிடப்பில் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்தியா படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு இந்தப் படத்துக்கு ரூ. 175 கோடி சம்பளம் என்கிறார்கள். இது தவிர படத்தின் லாபத்தில் 15 சதவீதத்தை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அல்லு அர்ஜுன் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார். ஆகஸ்ட் அல்லது அக்டோபரில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.