பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடிகை அனிதா சம்பத், தந்தையின் இறப்பு மற்றும் தாய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.அனிதா சம்பத், பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடங்கிய பயணம், தமிழில் “காப்பான்”, “தெய்வ மச்சான்” மற்றும் “காலங்களில் அவள் வசந்தம்” போன்ற படங்களில் நடித்திருப்பார். 2020ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றார்.
அனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தாய் மற்றும் தந்தையின் கனவுகளை நிறைவேற்றும் ஆசையுடன் வந்தவர். ஆனால், மூன்று ஆண்டுகள் முன்பு அவர் எதிர்கொண்ட சோதனைகளைப் பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பேசினார்.
அவர் கூறியது, “பிக் பாஸ் வீட்டில் இருந்த போது எனக்கு பல விமர்சனங்கள் கூறப்பட்டன. ஆனால் அந்தப் பொழுது நான் அதிகமாக கவலைப்படவில்லை. ஆனால் பிக் பாஸ் முடிந்து திரும்பிய பிறகு, எனக்கு ஏற்பட்ட இழப்பை மறக்க முடியவில்லை. பிக் பாஸ் செல்வதற்கு முன்பு என் தாய், தந்தை மற்றும் கணவருக்கு விடை கூறிவிட்டு சென்றேன்.”
“85 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த பிறகு, நான் வெளியே வந்ததும் 15 நாள் தனிமைப்படுத்தப்பட்டேன். மொத்தம் 100 நாட்கள் கழித்து நான் என் தந்தையின் உடலை மட்டுமே பார்க்க முடிந்தது. அந்த நேரம், என் மன நிலையைப் பாருங்கள். ஆனால் அப்போது கூட நான் போட்ட இன்ஸ்டா பதிவிற்காக என்னை நோக்கி திட்டினார்கள்.”
அவர் மேலும் கூறுகிறார், “என் தந்தையை வெளிநாடுகளுக்கு டூர் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன், அதற்காகவே பிக் பாஸ் வீட்டிற்கு வந்தேன். அங்கு இருந்தபோது, குறைந்த பட்ஜெட்டில் எங்கு டூர் செல்லலாம் என்று நான் அடிக்கடி பேசுவேன். என் தாய், தாலியை அடகு வைத்து என்னை படிக்கவைத்தார். அவருக்கு 5 பவுனில் தாலி செயின் செய்ய விரும்பினேன். ஆனால், இப்போது யாரை டூர் கொண்டு செல்லலாம்? என் அம்மாக்கு தாலி வாங்கிக்கொடுக்க முடியுமா? ஆனால் நான் சந்தோஷமாக இருப்பதாகக் கூறி என்னை திட்டுகிறார்கள்.”
அனிதா தனது உணர்வுகளைப் பகிர்ந்து, இதற்கான வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.