சென்னை: தனுஷின் 52வது படமான இட்லி கடை படத்தை தனுஷே இயக்கி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், தனுஷ் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த வாரம் தனுஷின் உடல்நிலை சரியில்லாததால் இட்லி கடை படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை வந்து விட்டார் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த செய்தி இணையத்தில் பரவி, கடைசியில் தனுஷ் படுத்த படுக்கையாகிவிட்டார் என்பது போன்ற வதந்திகளாக மாறியுள்ளது. உண்மையில், படப்பிடிப்பில் நடந்த விஷயம் குறித்து தெரிந்தால், தனுஷின் ரசிகர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.
இட்லி கடை படப்பிடிப்பில், ஒரு வீட்டை கொளுத்தும் காட்சியில் தனுஷ் உள்ளே சென்று அங்கு இருப்பவர்களை காப்பாற்றுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் அதிக புகை இருந்ததால், டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தனர்.
ஆனால், தனுஷ் அதைப் பரிசீலிக்காமல், அந்த காட்சியில் நான் நடிப்பதே நல்லது என தனது பிடிவாதமாக இருந்தார். தனுஷுக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கின்றதால், இந்த புகையும் அவருக்கு பிரச்சனை அளித்துள்ளது. இதனால், படப்பிடிப்பை நிறுத்தி சென்னையில் ஓய்வு எடுத்து, பின்னர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். தனுஷ் தற்போது வெளிநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறார். புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்த பிறகு திரும்பி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அவர் திட்டமிட்டுள்ளார்.