‘அந்தோணி’ படத்தில் ‘கயல்’ வின்சென்ட், டி.ஜே.பானு நடித்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் கடலோர வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன் மற்றும் சௌமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நிழல்கள் ரவி மற்றும் அருள்தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சுகிர்தன் கிறிஸ்துராஜா-ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. கலை வளரி சகாயராமனா – ஓசை பிலிம்ஸ் சார்பில் சுகா, விஜய் பாலசிங்கம் பிலிம்ஸ் சார்பில் விஜய் சங்கர், டிரீம் லைன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கானா புரொடக்ஷன்ஸ் சார்பில் சீரிஸ் கந்தராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.