ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. தமிழில் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட பல படங்கள் அனுஷ்காவுக்கு பெரிய மார்க்கெட்டைக் கொடுத்தன.
இடையில் உடல் எடை அதிகரித்ததால் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது காதி, கத்தனார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் 17 வருடங்களுக்கு முன் பெரிய நடிகர் படத்தில் நடித்தது தப்பு என்று கூறியது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் நடிகை அனுஷ்கா கூறியதாவது, 2008-ல் வெளியான ‘ஒக்க மகாடு’ படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தேன்.

படத்தின் கதை என்ன என்று கேட்காமல் நடித்தேன். அந்தப் படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இல்லை. அந்த படத்தில் நடிப்பது மிகவும் தவறாக கருதுகிறேன் என்று அனுஷ்கா கூறினார். இப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. படத்தில் அனுஷ்கா கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார்.