அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபு நடிக்கும் ‘காதி’. அனுஷ்காவின் 50-வது படத்தை கிரிஷ் ஜாகர்லமுடி இயக்குகிறார். UV கிரியேஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தை ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி இணைந்து தயாரிக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார்.

மனோஜ் ரெட்டி கடாசானி ஒளிப்பதிவு செய்கிறார், நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும்.