மும்பை: திரைபிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல் 12) காலமானார். அவருக்கு வயது 92. மும்பையில் வசித்து வந்த அவர். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று மும்பையில் சிவாஜி பூங்காவில் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.
திரைபிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.