அசோக் செல்வம் – கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மில்லியன் டாலர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களை தயாரித்து முடித்துள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இதைத் தொடர்ந்து புதிய படத்தை தயாரிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கும் இப்படத்தில் நடிக்க அசோக் செல்வனும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளனர். இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட முயற்சித்து வருகின்றனர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.