‘டாடா’ போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளரான எஸ்.அம்பேத் குமார், ஒன்றன் பின் ஒன்றாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். ‘டிஎன்ஏ’ படத்தை ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தனது கதையின் மீதும், தன் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி தெரிவித்தார். படம் பற்றி பேசிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்…
‘டிஎன்ஏ’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கதை சொன்னபடியே படமாக்கியிருப்பதால் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படம் முடியும் வரை அதர்வா முரளி எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
என் கேரியரின் ஆரம்ப நாட்களில் அதர்வாவின் படங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன். என் கதையைக் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி. அவருடைய கேரியரில் ‘டிஎன்ஏ’ நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் திறமையாக நடித்துள்ளார். இது பலருக்கு சவாலான பாத்திரமாக இருக்கும். ஆனால், அதை அற்புதமாக கையாண்டிருக்கிறார் நிமிஷா. படத்தை பார்வையாளர்களுக்காக திரைக்கு கொண்டு வர ஆவலாக உள்ளோம்” என்றார்.
இந்த க்ரைம்-ஆக்ஷன் படத்தில் அதர்வா முரளி புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். இது அதர்வா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.