தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய அட்லி, பாலிவுட்டில் தனது முதல் பிளாக்பஸ்டர் படமான “ஜவான்” மூலம் மேலும் இந்தியாவின் கவனத்தை பெற்றார். அவரது இயக்குநராகிய திறமையை உலகம் முழுவதும் அறிந்தது.

இந்நிலையில், அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, மேலும் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஒரு பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் படம் ஆகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல்களும் வெளியானுள்ளன. படத்தின் பட்ஜெட் சுமார் 600 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வி எஃப் எக்ஸ் பணிகள், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி சம்பளங்களின் காரணமாக இந்த பட்ஜெட் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.