சென்னை: நடிகை அனுபமா நடித்துள்ள ‘பரதா’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில், ‘கார்த்திகேயா – 2′ , ’18 பேஜஸ்’, ‘டில்லு ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் அனுபமா தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தின் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வரவேற்பை பெற்றார்.
தற்போது இவர் ‘பரதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். இப்படத்தின் டீசரில் இரண்டு பெண்களுடன் பயணிக்கும் கிராமத்தியப் பெண்ணின் சாகசப் பயணத்தோடு கதை நகர்வதுபோல் உள்ளது. கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது.
பரதா படத்திலும் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்டு 22ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அனுபமா நடித்துள்ள ‘பரதா’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.