சென்னை: இந்தியாவிலேயே முதல் பைக்கை வாங்கிய நடிகர் மாதவன். அப்படி என்ன பைக் தெரியுங்களா?
சாக்லெட் பாயாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன். இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் மீண்டும் இவரது திரைப்பயணம் சூடு பிடித்துள்ளது என்றே கூறலாம்.
நடிகராக கலக்கிக் கொண்டிருந்தவர் இயக்குனராகவும் சாதித்துள்ளார். துபாயில் புதிய வீடு வாங்கி இருந்தவர் தற்போது புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதுகுறித்த ஸ்பெஷல் தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் பிராண்டான பிரிக்ஸ்டன் மோட்டார் சைக்கிள்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
அந்த புதிய பைக்கை இந்தியாவில் முதல் நபராக நடிகர் மாதவன் வாங்கியுள்ளார். ₹7,84,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில், பிரிக்ஸ்டன் க்ரோம்வெல் 1200 சிறந்த அம்சங்கள் மற்றும் மலிவு விலையை வழங்குகிறது.
உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பிரிவில் இது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாகும். டெஸ்ட் ரைடுகள் மற்றும் முன்பதிவுகள் இப்போது மோட்டோஹாஸ் விற்பனையகங்களில் கிடைக்கின்றன.