பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ படப்பிடிப்பு கும்பமேளாவில் தொடங்கியது. நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் போயபதி சீனு இயக்கும் படம் ‘அகண்டா’. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் காட்சியமைப்பு, வீரம் மற்றும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அதன் 2-வது பாகம் அறிவிக்கப்பட்டது. தற்போது, இதன் படப்பிடிப்பு கும்பமேளாவிலிருந்து தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சியுடன் படப்பிடிப்பு முழு வீச்சில் தொடங்கும். இந்தப் படத்தை போயபதி சீனு இயக்குகிறார்.
இதைப் பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வானி வழங்கும் 14 ரீல்ஸ் தயாரிக்கிறது. செப்டம்பர் 25-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் பாலகிருஷ்ணாவுடன் யார் நடிப்பார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.