ஹைதராபாத்: பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போயப்பட்டி சீனு இயக்கிய பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ படம் வெளியிடப்பட்டது.
படத்தின் மாஸ் காட்சிகள் மற்றும் வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் காரணமாக, படமும் வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, தற்போது ‘அகண்டா 2’ தயாராகி வருகிறது. செப்டம்பர் 25-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு முதலில் அறிவித்திருந்தது.

இருப்பினும், இறுதிக்கட்டப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகாது என்று படக்குழு தெரிவித்துள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அகண்டா 2’ வெறும் படமாக இருக்காது, அது ஒரு சினிமா விழா போல இருக்கும் என்று படக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த பல பாலகிருஷ்ணா ரசிகர்கள், இந்த அறிவிப்பால் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.