ஐதராபாத்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘ஹனுமான்’ தெலுங்குப் படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.400 கோடி வசூல் செய்தது. இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். இவரது அடுத்த படம் சிம்பா.
இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா நடிகராக அறிமுகமாகிறார். ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகும் இப்படத்தை லெஜண்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.
நடிகர் மோக்ஷக்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தனது எக்ஸ் சைட் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் வர்மா, “பாலகிருஷ்ணாவின் ஆசியுடன் இந்தப் படத்தின் மூலம் அவருடைய மகனை அறிமுகம் செய்வதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.
என்.டி.ராமராவ் ஒரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர். இவருக்கு 8 மகன்கள் உள்ளனர். இதில் நந்தமுரி ஹரிகிருஷ்ணா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவரும் நடிகர்களாக நடிக்கின்றனர்.
நந்தமுரி ஜெயகிருஷ்ணா தயாரிப்பாளர். நந்தமுரி மோகன கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜூனியர் என்டிஆர். பாலகிருஷ்ணாவின் மகன் என்ட்ரியும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.