“96” படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட இயக்குனர் பிரேம்குமார், அதன் வெற்றியின் பிறகு, கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் “மெய்யழகன்” படத்தை இயக்கி, மேலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றார். இந்த படத்தின் ரிலீசின் போது, அவர் “96” படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்தார்.

ஒரு நேர்காணலில், பிரேம்குமார் கூறியதாவது, “என்னுடைய அடுத்த படம் என்னவென்பது இதுவரை முடிவாகவில்லை. நான் ’96’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதியிருக்கிறேன். முதலில் அதை படமாக எடுக்க வேண்டாம் என்று நினைத்தேன், ஆனால் எழுதி முடித்தபோது அதை படம் ஆக பார்க்கும் ஆர்வம் எனக்கே வந்துவிட்டது” என்று கூறினார். இரண்டாம் பாகத்தை “வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் பிலிம்” தயாரிக்கவிருக்கிறது, இதில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர், மற்றும் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.
இப்போது, இரண்டாம் பாகத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில், இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்துவிட்டார் என்ற தகவலை அவர் உறுதி செய்தார்.