இந்தி திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி 2019-ல் ‘த தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கினார். அதன் பிறகு அவர் ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கினார், இது 2022-ல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் கடந்த ஆண்டு ‘தி வாக்சின் வார்’ படத்தை இயக்கினார். இது பற்றி அதிகம் பேசப்படவில்லை. இப்போது அவர் ‘தி டெல்லி ஃபைல்ஸ்: தி பெங்கால் சாப்டர்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு ‘தி பெங்கால் ஃபைல்ஸ்: ரைட் டூ லைஃப்’ என மாற்றப்பட்டுள்ளது. இதை தனது எக்ஸ் வலைத்தளத்தில் அறிவித்த விவேக் அக்னிஹோத்ரி, அதன் டீசர் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கூறினார்.