சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தயாரித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருந்தார். விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சென்னை முகப்பேரில் வசித்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் தனது வீட்டின் முன்பு உள்ள டீக்கடைக்கு குடும்பத்துடன் காரில் வந்துள்ளார்.
தர்ஷனின் வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு தர்ஷன் கூறினான். இதனால் அவருக்கும் நீதிபதி மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் நீதிபதியின் மகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக நீதிபதியின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், நீதிபதியின் மகன் தன்னைத் தாக்கியதாக தர்ஷன் அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தர்ஷனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.