‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுக்கப்பற்று’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘பிளாக்’.
கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கோகுல் பினாய்யின் இந்த படத்தின் ஒளிப்பதிவை சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.
“ஒரு நாள் இரவு நடக்கும் சம்பவங்கள்தான் படம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். இந்த த்ரில்லர் கதையின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை ‘பிளாக்’ என்று சொல்லலாம்.
யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நம் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தாதபோது ‘பிளாக்’ என்றும் சொல்லலாம். இதுதான் இந்தப் படத்தின் கதை” என்கிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.