சென்னையில் நடிகை த்ரிஷாவின் நீலாங்கரை இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் வீட்டின் உள்ளும் வெளியும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு, வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை, இது போலியான மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது.

இந்த மின்னஞ்சல் மிரட்டல் அதிகாலை காவல்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, எஸ். வி. சேகர் உள்ளிட்ட இடங்களுக்கும் இதேபோல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. போலீசார் உடனுக்குடன் அனைத்து இடங்களையும் சென்று சோதனை செய்தனர்.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதற்காக 50 போலீசார்கள் பாதுகாப்பில் இருந்தனர். பெயர், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்த பின் மட்டுமே பொதுமக்களுக்கு வீட்டின் அருகே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. விஜய் வீட்டிற்கு மத்திய அரசு பாதுகாப்பும் வழங்கியுள்ளது.
கடந்த வாரங்களில் நடிகர் சூர்யா, விஜயகாந்த், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கும் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால் சைபர் குற்ற விசாரணை அதிகாரிகள் அஞ்சல் முகவரியை கண்டுபிடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். காவல்துறை இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.