ஹாலிவுட் படமான ‘சூப்பர்மேன்’ இந்தியாவில் வெளியான 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூலித்துள்ளது. ஜேம்ஸ் கன் இயக்கிய, ஜூலை 11 அன்று வெளியான ‘சூப்பர்மேன்’, பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சன ரீதியாக உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை வெளியான அனைத்து ‘சூப்பர்மேன்’ படங்களையும் இந்தப் படம் முறியடித்துள்ளது.
படத்தின் மொத்த பட்ஜெட் 225 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் படம் வெளியான இரண்டு நாட்களில் 217 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இது நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ‘சூப்பர்மேன்’ படமும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படம் முந்தைய டிசி படங்களின் வசூலை விட 55 சதவீதம் அதிகமாக வசூலித்துள்ளது.
கடந்த வாரம் வெளியான ‘மாலிக்’ மற்றும் ‘ஆங்கோன் கி குஸ்தான்கியான்’ போன்ற இந்தி படங்களை முந்தி, ரூ.25 கோடி வசூலித்துள்ளது.