அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் ஸ்வேதா மற்றும் நிதி சாகர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படம் பற்றி சண்முக பிரியன் பேசுகையில், “திருமணம் தாமதத்தால் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒருவன் சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள் பற்றி பேசும் படம். கதையை எழுதி முடித்தவுடனே இந்த கதைக்கு விக்ரம் பிரபு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவர் இதுவரை அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடித்ததில்லை. அவர் உடனே கதைக்கு ஒப்புக்கொண்டார். கோபிசெட்டிபாளையத்தில் கதை நடக்கிறது.
ஹீரோ உசிலம்பட்டியில் துணிக்கடை வைத்துள்ளார். கதாநாயகி சுஷ்மிதா பட் ஆசிரியை. அவர்கள் எப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை. இப்படம் குடும்பக் கதையாக இருந்தாலும் நகைச்சுவையாகவும் இருக்கும். இந்தக் கதையுடன் அனைவரும் தொடர்பு கொள்ளலாம். கோபி செட்டிபாளையத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான வீட்டில் சில காட்சிகளை படமாக்கினோம். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது” என்றார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.