நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலுடன் கடந்த வருடம் கோவாவில் வைத்து ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் தனது நெருங்கிய நண்பர்களுக்காக ஒரு கோலாகலமான பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், நடிகை மேனகாவின் மகளாக மலையாள திரைப்படத்துறையில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தமிழில் ஏ.எல். விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான அவர், ரஜினி முருகன் படத்திற்குப் பிறகு பெரும் புகழைப் பெற்றார். அதன் தொடர்ச்சியாக விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
தெலுங்கு திரையுலகில் மகாநதி திரைப்படத்தின் மூலம் அவர் இன்னொரு உயரத்தை தொட்டார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் அந்தப் படத்தில், அவரது நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. இப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்றதுடன், அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
மகாநடி வெற்றிக்கு பிறகு சில காலம் தமிழில் நடிக்கவில்லை. ஆனால் மாமன்னன் படம் அவருக்கு புதிய கம்பேக் ஆனது. அதன் பிறகு சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது பயணத்தைத் தொடங்கினார். வருண் தவானுடன் நடித்து வெளியான பாடல், அவரது கிளாமர் கதாபாத்திரத்திற்காக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது காதலரைப் பற்றி பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர், ஆண்டனி தட்டிலுடன் அவர் திருமணத்தை நடத்தினார். கோவாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்குப் பிறகும் நடிப்பை தொடரும் குறித்த கீர்த்தி, தனது ஹனிமூனை விட்டுவைத்து பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டார். தற்போது, தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் சேர்ந்து நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஒரு தனியார் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில், பச்சை நிற உடையில் மின்னல்போல் தோன்றிய கீர்த்தி, கணவருடன் இணைந்து ஆட்டம் போட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.