மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் படங்களுக்கு யு, ஏ மற்றும் ‘யுஏ’ வகைகளில் சான்றிதழ் அளிக்கிறது. இப்போது U, A, UA7+, UA13+, UA16+ ஆகிய திரைப்படங்களுக்கு சான்றிதழ் அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ‘யு’ பிரிவை அனைவரும் பார்க்கவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான படங்களுக்கு ‘ஏ’ வகையும் உள்ளது.
UA7+, UA 13+ மற்றும் UA 16+ ஆகியவை 7, 13 மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளால் பார்ப்பதற்காக அந்தந்த வயதினருக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளை படம் பார்க்க அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன், படத்தின் சான்றிதழ் விவரங்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.