‘அனிமல்’ இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என உறுதியாகியுள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்திற்கு முன், ‘ஃபாஜி’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ்.

ஏனெனில் ‘ஸ்பிரிட்’ படத்திற்காக தனது உடலை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 2 மாதங்கள் முழு உணவு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வார். மேலும், படத்திற்கு டூப் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்குமாறு பிரபாஸிடம் சந்தீப் ரெட்டி வங்கா கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பிரபாஸும் சம்மதித்துள்ளார். எனவே, ஒரேயடியாக ‘ஸ்பிரிட்’ படத்தை தேதி கொடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.
‘ஸ்பிரிட்’ படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கி 2027-ல் வெளியாகும்.இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூஷன் குமார் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து தயாரிக்கவுள்ளனர்.