வெங்கல் ராவ் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர். வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் ஸ்டண்ட்மேனாகப் பணியாற்றினார். பிறகு நகைச்சுவை பக்கம் திரும்பினார்.
கடந்த 2022-ம் ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டார். இதற்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், தனது ஒரு கை, கால் செயலிழந்த நிலையில், தனக்கு உதவுமாறு திரைத்துறையினரிடம் வீடியோ மூலம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், “எனக்கு கை, கால் செயலிழந்து விட்டது. நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல பணமில்லை. நடிகர்கள், சங்கங்கள் உதவ வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.