விஜய் தற்போது “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு முழுநேர அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் தற்போது நடிகராக மட்டுமின்றி தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் அறியப்படுகிறார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள அவர், முழு நேர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு விஜய் தனது கட்சியை அறிவித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் விஜய் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 வருடங்களுக்கு முன் “காவலன்” படத்தின் வெளியீட்டின் போது, “என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள்.. அதனால் அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். அதில், “இதற்கு ஒரு காலம் வரும். நான் வந்தவுடன் அதற்கான அடித்தளம் போடுவேன்” என்று கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதை தொடர்ந்து விஜய் தற்போது சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் சமுதாயத்திற்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது விஜய்யின் ரசிகர்கள் அந்த பழைய பேட்டியை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து “சொன்னதை செய்த தளபதி” என பாராட்டி வருகின்றனர்.