இந்தி நடிகை கஜோல் தற்போது ‘மா’ படத்தில் நடித்து வருகிறார். விஷால் புரியா இயக்கிய இந்த திகில் படம் வரும் 27-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் விளம்பரத்தில் பங்கேற்ற கஜோல், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரத்தில் நடந்த படப்பிடிப்பு அனுபவத்தைப் பற்றிப் பேசினார்.

அப்போது, அது பேய்கள் நிறைந்த இடத்தின் உதாரணம் என்று அவர் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கஜோல் தனது விளக்கத்தில், “நான் நடித்த பல படங்களின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் திரைப்பட நகரத்தில் நடந்துள்ளது. நான் அங்கு பல முறை தங்கியிருக்கிறேன். படப்பிடிப்புக்கு ஏற்ற சூழல் அங்கு இருப்பதைக் கண்டேன். இது குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பாதுகாப்பானது” என்றார்.