பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பை அந்தேரி பகுதியில் தங்களுக்குச் சொந்தமான இரண்டு நிலங்களை விற்பனை செய்தனர். இந்த நிலங்களை வாங்கிய நிறுவனமான என்டிடி குளோபல் டேட்டா சென்டர்ஸ் ரூ. 855 கோடி செலுத்தியுள்ளது. இந்த விற்பனை விவரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜிதேந்திரா தற்போது 83 வயதில் மும்பையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகள் ஏக்தா கபூர் இந்தி சீரியல் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும், மகன் துஷார் கபூர் நடிகராகவும் உள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஜிதேந்திரா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான 9,664 சதுர அடியில் அமைந்த இந்த நிலம் கடந்த மே 29ஆம் தேதி சொத்துமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்டாம்ப் டியூட்டியாக மட்டும் ரூ. 8.69 கோடி செலுத்தப்பட்டுள்ளது. விற்பனை குறித்து குடும்பத்தினர் எந்தத் தகவலும் வெளியிடாததால் இது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏன் இவ்வளவு உயர் மதிப்பில் திடீரென நிலத்தை விற்றார்கள் என்பது தொடர்பாக பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாலிவுட் பிரபலங்களில் பலர் நிலம் மற்றும் வீடுகளில் முதலீடு செய்து வருவது புதியதல்ல. அதில் சிலர் லாபம் பார்ப்பதற்காக அடிக்கடி சொத்துகளை வாங்கி விற்பதும் சகஜம். இந்நிலையில் ஜிதேந்திராவின் நில விற்பனை சினிமா வட்டாரத்திலும், வாடகை சந்தையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே நேரத்தில் ஆமீர் கான் பந்த்ரா பகுதியில் ரூ. 9 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார். சல்மான் கான் மட்டும் தான் பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வருகிறார்.
வாடகை வீட்டில் பல பாலிவுட் பிரபலங்கள் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் மாதத்திற்கு ரூ. 17 லட்சம் வாடகை கொடுத்து வீட்டில் வசித்து வருகிறார்கள். க்ரிட்டி சனோன் நடிகர் அமிதாப் பச்சனின் அபார்ட்மென்ட்டை ரூ. 10 லட்சம் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த நிலத்தரகர் உலகில் நடக்கும் வியப்பூட்டும் பரிவர்த்தனைகள் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.