சென்னை: மொத்தமாக 4 நாட்களில் 404 கோடி ரூபாய் கூலி படம் வசூலித்து இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. முதல் நாளே உலகம் முழுக்க 152 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக அறிவித்து இருந்தனர்.
அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 4 நாட்கள் அதிகாரபூர்வ வசூலை அறிவித்து இருக்கிறது சன் பிக்சர்ஸ். மொத்தமாக 4 நாட்களில் 404 கோடி ரூபாய் கூலி படம் வசூலித்து இருக்கிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் 4 நாட்களில் இவ்வளவு வசூலித்த முதல் படம் இது எனவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்து இருக்கிறது