சென்னை: நடிகர் அஜித்தை காதலித்தேன். ஆனால் அவர் நோ சொல்லிவிட்டார் என்று நடிகை மகேஸ்வரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அஜித்தை காதலித்தேன் என்று பிரபல நடிகை மகேஸ்வரி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1997ம் ஆண்டு வெளியான நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார்.
அந்த சமயத்தில் அஜித்குமார் மீது தனக்கு கிரஷ் ஏற்பட்டது ஆனால் அவர் நோ சொல்லிவிட்டார் என்று நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.