பா.ரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் நடித்த தண்டகாரண்யம் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இயக்குநர் சேரன், “அதிகாரம் எவ்வாறு சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஊடுருவி அவர்களை அடிமைகளாக்குகிறது என்பதை மிக அழகாகச் சொன்ன படம் இது” எனப் பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்தபின் ஏற்படும் வலியை மறக்கவே வாரங்கள் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா, “நக்சல்களை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் நடுத்தர மக்களை அரசாங்கம் எவ்வாறு துன்புறுத்துகிறது என்பதைக் காட்டிய சிறந்த படைப்பு இது” என்று கூறி, 5க்கு 3.75 ரேட்டிங் வழங்கியுள்ளார்.
சமூக மற்றும் அரசியல் கோணத்தில் துணிச்சலான படைப்பாகவும், குரலற்றவர்களின் குரலாகவும் தண்டகாரண்யம் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படம் கமர்ஷியல் வெற்றியும் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவல்.