சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸின் அடுத்த படம் ‘டார்பிடோ’ என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. ’துடரும்’ பட இயக்குனர் அர்ஜுன் தாஸின் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அர்ஜுன் தாஸ், அதில் வரும் ‘லைப் டைம் செட்டில்மெண்ட்’ என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து ‘மாஸ்டர், விக்ரம், ரசவாதி, அநீதி’ ஆகிய படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.
கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் மோகல்லால் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘துடரும்’ பட இயக்குனர் அர்ஜுன் தாஸின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘டார்பிடோ ‘எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் அவருடன் பகத் பாசில், பிரேமலு நடிகர் நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.