டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தப் படத்தில் அருள்நிதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு அறிமுகமான படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 9 ஆண்டுகளுக்கு பிறகு டிமாண்டி காலனி 2 வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் உள்ள தொடர்பை மிக அழகாக காட்டியிருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. மேலும், இந்த படம் அஜய் ஞானமுத்துவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டிமாண்டி காலனி 2 மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 15.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என சொல்லப்படுகிறது.