‘டிமாண்ட்டி காலனி’ 3-ம் பாகத்தை உருவாக்கும் பணியை இக்குழு தொடங்கியுள்ளது. அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கியுள்ள படம் ‘டிமாண்ட்டி காலனி 2’. படத்தின் முழு உரிமையையும் பிடிஜே நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 3-ம் பாகத்தை தயாரிக்க பிடிஜே நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து தற்போது ‘டிமாண்ட்டி காலனி 3’ படத்தின் முதல் கட்ட வேலைகளை தொடங்கியுள்ளார். இதிலும் அருள்நிதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க ஐரோப்பாவில் உள்ள மால்டா நகரில் நடக்கும் கதையை உருவாக்கியுள்ளார். இதனால் அங்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. அதன் மாபெரும் வெற்றியால் 2-ம் பாகத்தை இயக்கினார். அது வெற்றியடையும் வகையில் 3-ம் பாகத்தின் வேலைகளையும் அவர் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.