தனுஷ் மற்றும் ஹெச்.வினோத் இணையும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த ப்ராஜெக்ட் ஒரு சில வருடங்களாகவே திட்டமிடப்பட்டு வந்தாலும், இடையிலான பிற படப்பிடிப்புகள் காரணமாக தள்ளிப் போனது. தற்போது இதன் படப்பிடிப்பு 2026 மார்ச் மாதம் துவங்கும் என உறுதியாக தெரிகிறது.

தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கும் D54, மற்றும் ராஜ்குமார் பெரியசாமியின் D55 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படங்களை முடித்தவுடன், ஹெச்.வினோத் ப்ராஜெக்டுக்கு அவர் முழு நேரத்தை ஒதுக்க உள்ளார். இந்த படத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது, தனுஷின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எனப்படுகிறது.
இதன் மீது அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஹெச்.வினோத் இயக்கும் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் வெளியான பிறகு வெளியாகும். ஏற்கனவே இசையமைப்பாளராக சாம் சிஎஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் சதுரங்கவேட்டை பாணியில் ஒரு த்ரில்லராக உருவாகும் என கூறப்படுகிறது.