
ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இன்று அதிகாலை முதல் நாடு முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போலக் கொண்டாடினர். அவர்களுடன் சேர்ந்து முக்கிய பிரபலங்களும் படம் ரசித்தனர். அதில் முன்னிலையில் இருந்தவர் நடிகர் தனுஷ். அவர் சென்னை மாநகரில் உள்ள பிரபல தியேட்டரில் படம் பார்த்து ரசித்தார். அதே தியேட்டரில் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திரைப்படத்தை பார்த்தார் என்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத சூர்பிரைஸாக அமைந்தது.

தனுஷின் தோற்றம் மற்றும் மகனின் ஹீரோ லுக்
படத்தை பார்க்க தனுஷ் கருப்பு உடையில் வந்திருந்தார். அவரது முகத்தில் தெரிந்த தனித்துவமான மகிழ்ச்சி, சமீபத்தில் அவரது வாழ்க்கையில் நன்றாக நடக்கிறது என்கிற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. அவருடன் வந்திருந்தவர் யாத்ரா, சுறுசுறுப்பான ஸ்லிம் லுக்கில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒளிப்பதிவாளராக ஆசை கொண்டுள்ள யாத்ரா, ரசிகர்களிடம் “தனுஷ் பேசாமல் மகனை வைத்து ஒரு படம் எடுக்கணும்!” எனும் கோரிக்கையை தூண்டியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அதே இடத்தில்
தனுஷுடன் படம் பார்க்க அவரது இளைய மகன் லிங்கா வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், ஐஸ்வர்யாவை திரையரங்கில் பார்த்ததில் ஆச்சரியமானார்கள். தன் அப்பாவின் படம் என்பதால், அவர் படம் பார்க்க வருவது இயல்பானதே. ஆனால், முன்னாள் கணவரும், மிருணாள் தாகூருடன் தொடர்பில் இருக்கிறார் எனும் பேச்சுகளுக்கிடையில் அவர்களது ஒரே இடத்தில் இருப்பது ரசிகர்களிடம் கலந்த உணர்வுகளை உருவாக்கியது. இதுவரை தனுஷ் இந்த காதல் பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் மிருணாள் “எங்களுக்குள் காதல் இல்லை” எனச் சொல்லியும், ரசிகர்கள் அவரை “அண்ணி” என அழைக்கிறார்கள்.
கூலி படம் மீதான விமர்சனங்கள்
ரஜினி ரசிகர்கள் “கூலி பிளாக்பஸ்டர்” என கொண்டாடுகிறார்கள். ஆனால் லோகேஷின் கதை, திரைக்கதை குறித்து சில விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. குறிப்பாக, “நான் கமல் ரசிகன்” என சொன்ன லோகேஷ் கனகராஜ் அந்த ஹிண்டை தலைவருக்கே புரியவில்லையா? எனும் வகையிலான கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. இது ரசிகர்களிடையே கலந்த உணர்வுகளை உருவாக்கியுள்ளது. இருப்பினும், முதல் நாள் வசூல் ரூ.150 கோடிக்கு மேலாக இருப்பதாக கூறப்படுவதால், ‘கூலிக்கு பிரமோஷனே தேவை இல்ல’ என்ற தம்பட்டமும் அடிக்கப்படுகிறது.