சென்னை: தனுஷின் ராயன் படத்தில் அவரது தம்பி ரோலில் நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தாராம் ஜி.வி. பிரகாஷ். எதற்காக மறுப்பு தெரிவித்தார் தெரியுங்களா?
நடிகர் தனுஷின் பல படங்களுக்கு ஜீவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார். வாத்தி படத்திற்காக சமீபத்தில் ஜீவிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்து இருந்தது.
அடுத்து தனுஷின் இட்லி கடை படத்திற்கும் ஜீவி பிரகாஷ் தான் இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது ஜீ.வி பிரகாஷ் தான் தனுஷின் ராயன் படத்தில் அவரது தம்பி ரோலில் நடிக்க இருந்ததாகும், ஆனால் அதில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.
ராயன் படத்தில் தனுஷின் தம்பி ரோலில் தான் அவர் நடிக்க இருந்தாராம். முதுகில் குத்தும் ரோல் அது என்பதால் தான் நடிக்க மறுத்துவிட்டதாக ஜீவி கூறி இருக்கிறார்.
அதற்கு நான் நேரடி வில்லனாகவே நடித்துவிட்டு போவேனே எனவும் அவர் கூறி இருக்கிறார்.