தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியுள்ளார். அடுத்து ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
அடுத்து ரூசோ சகோதரர்கள் இயக்கிய ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்தார். இவர்கள் இயக்கும் மற்றொரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சோனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, ‘நைட் டீத்’, ‘மேடம் வெப்’, ‘ஈடன்’ என பல படங்களில் நடித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து தனுஷ் தரப்பிடம் கேட்டபோது, “ஒரு நிகழ்ச்சிக்காக தனுஷ் லண்டன் சென்றிருந்தார்.
அங்கு சோனி நிறுவன நிர்வாகிகளையும் சந்தித்தார். அவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை” என்றார்.