‘வட சென்னை 2’ என்பது 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். படத்தின் உச்சக்கட்டம் இரண்டாம் பாகத்தைப் பற்றிய குறிப்புடன் முடிவடைந்திருக்கும். ஆனால் அதன் பிறகு, தனுஷும் வெற்றிமாறனும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்ததால், இரண்டாம் பாகம் தொடங்கப்படவில்லை. இருவரும் இணைந்து ‘அசுரன்’ படத்தை வழங்கிய பிறகும், ‘வட சென்னை’ குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
‘வட சென்னை2’ எப்போது வெளியாகும் என்று பல ரசிகர்கள் வெற்றிமாறனையும் படக்குழுவையும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். படத்தின் காட்சிகள் இணையத்தில் இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

இதில், ரசிகர்கள் தனுஷிடம் ‘வட சென்னை 2’ எப்போது வெளியாகும் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த தனுஷ், ‘நீங்களும் 2018 முதல் கேட்டு வருகிறீர்கள். ‘வட சென்னை 2′ அடுத்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகும்’ என்றார். இது தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.