நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனத்தை பெற்றது. இதில் தனுஷ், ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘குபேரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடந்தது. மொத்த ஷூட்டிங்கும் முடிந்த நிலையில், சில காட்சிகளை சமீபத்தில் ரி ஷூட் செய்தனர்.
படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு கையுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.