சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணம் ஒன்று நிகழ்ந்தது. தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது, திடீரென தனது மகன் லிங்காவை மேடைக்கு அழைத்தார். பாடல் முடிந்ததும், இருவரும் சேர்ந்து ஜாலியாக நடனமாடினர்.

அந்த தருணத்தில் ரசிகர்கள் இடம் பெயர்ந்து ஆரவாரம் செய்தனர். மகனுடன் ஆடிய பின் தனுஷ், லிங்காவுக்கு முத்தம் கொடுத்தது அங்கு இருந்த அனைவரின் மனதையும் கவர்ந்தது. இந்தக் காட்சி வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள், “தனுஷ் தனது மகனை மேடையேற்றி விட்டாரே!” என்று ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
இட்லி கடை படம் தனுஷின் 52வது படமாகும். அவர் கதை எழுதி, இயக்கியும், நடித்தும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது.
முந்தைய குபேரா படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும், தெலுங்கில் வெற்றி பெற்றது. இதனால் தனுஷ் ரசிகர்கள் இட்லி கடை குறித்து அதிக நம்பிக்கையோடு உள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த தந்தை-மகன் தருணம், அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.