அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி. பிரகாஷ், சுனில், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது திரைப்பட பயணத்தை முதலில் தனது நண்பர் ஜி.வி.பிரகாஷ்யுடன் தொடங்கியதாக குறிப்பிட்டார்.
அப்போது அஜித்தை பாராட்டினார். அதன்பிறகு ‘குட் பேட் அக்லி’ படம் வெளியான பிறகு அஜித்துடன் போனில் பேசியதாக குறிப்பிட்டார். அதில், “படம் ரிலீஸ் ஆன பிறகு அஜித் சாரிடம் பேசினேன்.அவர், “படம் பிளாக்பஸ்டர். மறந்துவிடு. இந்த வெற்றியை உங்கள் தலையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அதேபோல், தோல்வியை வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள். அடுத்து என்ன வேலை செய்யத் தொடங்கு. தொடர்ந்து பணியாற்றுங்கள்” என்றார் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித் இன்னொரு படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “இந்த வெற்றியை ரசிக்கிறேன். வாழ்க்கையும் அஜித் சார் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால், மீண்டும் அதே டீமில் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன்.