சென்னை: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். இதையடுத்து சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தில் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
‘நாட்டாமை’, ‘முத்து’, ‘அவ்வை சண்முகி’, ‘பிஸ்தா’, ‘நட்புக்காக’, ‘படையப்பா’, ‘மின்சார கண்ணா’, ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’, ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘தசாவதாரம்’ போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்து உள்ளார்.
இதனிடையே, கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் (88) காலமானார். வயது மூப்பு காரணமாக நேற்று மாலை உயிரிழந்ததாக ரவிக்குமார் எக்ஸ் தள பதிவில் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து ருக்மணி அம்மாளின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.